அறுவை சிகிச்சையில் உயிரிழந்த இளைஞர்.. சென்னையில் பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!

 
ஹேமச்சந்திரன்

உடல் பருமன் காரணமாக கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்காக அறுவைச்சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்த இளைஞர், சிகிச்சை துவங்கிய சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை நகரை சேர்ந்தவர் டி.வி.செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான இவர் மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் இரட்டை பிறவிகள். இவர்களில் ஹேமராஜன், சித்தா ஆகியோர் மருந்தாளுனர்களாக பணியாற்றி வருகின்றனர். ஹேமச்சந்திரன், பி.எஸ்சி. ஐடி முடித்துவிட்டு டிசைனிங் வேலை செய்து வந்தார். உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹேமச்சந்திரன் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

ஹேமச்சந்திரன்

இதையடுத்து, அவருக்கு ஏப்ரல் 25ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த 15 நிமிடங்களில் அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.இதனால் அவரது குடும்பத்தினர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார். விசாரணை குழு மருத்துவமனையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தது.

ஹேமச்சந்திரன்

மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்றும், அறுவை சிகிச்சைக்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லை என்றும் குழுவின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அறுவை சிகிச்சைக்கு முன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கையெழுத்திடவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web