வேலை கேட்க வந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு.. சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அதிரடியாக கைது!

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - புதுப்பேட்டை ரோடு சாலையில் சூப்பர் மார்கெட் நடத்தி வருபவர் பலராமன் (48). இவரது சூப்பர் மார்க்கெட் கடைக்கு வேலை கேட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த நித்யா (18) என்ற பெண் சென்றுள்ளார். அப்போது அவரிடம் வேலை கொடுக்கும் சாக்கில் அந்த பெண்ணிடம் சுமார் 1 மணி நேரம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
வார்த்தைகள் கடுமையான ஆபாசமாக இருந்தால் அந்த பெண் இது குறித்து அவரது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. அவர் உறவினர் உடன் சென்று அவரது சூப்பர் மார்கெட்டில் இதைப் பற்றி கேட்டு உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு பேசியது உறுதிபடுத்தி அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் பின்னர் பலராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!