வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்.. தீக்குளித்த இளைஞன் பரிதாபமாக பலியான சோகம்!

 
ராஜ்குமார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டகரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். அரசு நிலத்தில் உள்ள இவரது வீட்டை இடிக்க கடந்த 4ம் தேதி அதிகாரிகள் சென்றனர். அப்போது ராஜ்குமார் வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றார். அதில் 85 சதவீத தீக்காயம் அடைந்த அவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.இதனிடையே கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வாணையர் கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய சர்மா ஆகியோர் பணியிடமாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web