சூப்பர்... சிறுமியின் வீடியோ தூங்க விடலை... வகுப்பறையை சுத்தம் செய்த அதிகாரிகள்!

 
அகிம்சா

 

எல்லோரும் படிச்சவங்க தானே... சின்ன பசங்க நாங்களே அத்தனை சுத்தமா வெச்சிருக்கோம்.. எங்க க்ளாஸ் ரூமை எப்படி நாசம் பண்ணியிருக்கீங்க.. இது கூட தெரியாதா? என்று யுகேஜி மழலை கேட்கிற கேள்வி தமிழகத்தின் அனைத்து அரசு அதிகாரிகளின் மீதும் வைக்கப்படுகிற விமர்சனங்கள் தான். இந்த வீடியோ வைரலாகி வந்தாலும், இவர்கள் அடுத்த முறையாவது திருந்துவார்களா? மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.  இதற்கான வாக்குப்பதிவுகள் அரசு,  உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பள்ளியில் கழிவுகளை கொட்டி சென்று விட்டீர்கள் இது சரியா ? என சராமாரியாக  கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அரசுப்பள்ளியில்  யுகேஜி படித்து வரும் ஒரு மாணவி , “ எங்களோட கிளாஸ் ரூம என்ன பண்ணி வச்சிருக்கீங்க ? அரசு அதிகாரிகள்” னு  சொல்றாங்க. ஆனால் சாப்பிட்ட உணவு குப்பைகளை கூட அகற்றாமல் பள்ளி வளாகத்திலேயே போட்டுட்டு போயிட்டீங்க.  எங்கள் பள்ளியை நாங்களே சுத்தமாக வைச்சிருக்கோம்.  வெளியில் இருந்து வருபவர்களும் அதே போன்று செய்ய வேண்டும் எனத் தெரியாதா?” என மழலை மொழியில் அரசு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டுள்ளார் பள்ளி மாணவி.  இந்த வீடியோ மூலம் இனி வரும் தலைமுறை தன்னை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாகவும், சரியாகவும் வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை மனதினுள் வேர் விடுகின்றது.

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இந்த வீடியோவை பார்த்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்றனர். உடனடியாக  அங்கிருந்த குப்பைகளை அகற்றியதுடன் உடைந்த அலமாரிகள், பெஞ்சுகளையும் சரிசெய்து கொடுத்தனர். மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் கல்பனா நேரில் பார்வையிட்டு சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார். யுகேஜி சிறுமி அகிம்சாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

From around the web