அதிகாரப்பூர்வ அறிவிப்பு... தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறை.. 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

 
தலைமைச் செயலகம்

தமிழகம் முழுவதும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இம்மாதம் 16ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை தினம் என்பதால், அன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நலம் காக்கும் ஸ்டாலின்

நாளை ஆகஸ்ட் 14ம் தேதி வியாழக்கிழமை ஒரு நாள் மட்டுமே பணி நாளாக உள்லது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை. அடுத்த நாளாக ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினங்களாக வருவது குறிப்பிடத்தக்கது.

பேருந்து

பலரும் இந்த 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் நோக்கி பயணப்பட தயாராகி வருகிறார்கள்.  ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முழுவதுமாக முடிந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று சொந்த ஊர்களில் இருண்டு சென்னை திரும்ப வசதியாக ஆகஸ்ட் 17ம் தேதி சென்னைக்கும் கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?