57 இடங்களில் ரெய்டு.. கட்டுக் கட்டாக பணம், நகைகள்.. மலைத்து நின்ற அதிகாரிகள்!

 
பெங்களூர்

கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் லஞ்சம் வாங்கும் வீடியோ, பேரம் பேசும் வீடியோக்கள் வெளியாகி பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எளிதாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. 

தான் ஆட்சிக்கு வந்தபிறகு முதலமைச்சர் யார் என்ற பிரச்சினை அவர்களுக்கு எழுந்தது. டெல்லியில் பஞ்சாயத்து தீர்த்துவைக்கப்பட்டு, அமைச்சரவை பட்டியலும் வெளியானது. இந்த நிலையில், ஆட்சிபொறுப்பேற்ற சில நாட்களிலேயே காங்கிரஸ் ஆட்சியில் முதல் முறையாக நேற்று மாநிலம் முழுவதும் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 

பெங்களூர்

அரசு அதிகாரிகளாக பணியாற்றி கொண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் குறித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பெங்களூர், மண்டியா, மைசூர், சிவமொக்கா, தட்சின கன்னடா, சாம்ராஜ்நகர், உடுப்பி, கொப்பல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மொத்தம் 57 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 

கடந்த ஆட்சியில் பெருமளவில் சொத்துகளை குவித்து சர்ச்சையில் சிக்கிய மொத்தம் 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். மின்வாரி அதிகாரி ரமேஷ், தொழிலாளர் துறை துணை இயக்குனர் நாராயணப்பா, கட்டுமான மைய பொறியாளர் வகீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூர்

இந்த சோதனையின்போது லோக்ஆயுக்தா போலீசார் அதிரும் வகையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பணம், நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளின் வீடுகளில் உள்ள சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்களை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டில் உள்ள தங்கநகை, வெள்ளி பொருட்கள் உள்பட விலையுயர்ந்த பொருட்களின் மதிப்புகளை கணக்கீடு செய்தனர். 

அப்போது சில அதிகாரிகள் கணக்கில் காட்டாத வகையில் பெரியளவில் ரொக்கப்பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்களை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

குறிப்பாக பெங்களூர் பெஸ்காம் அதிகாரி ரமேஷ் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள், என ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் சிக்கியது. ஹாவேரில் உள்ள வகீஸ் செட்டர் வீட்டில் கணக்கில் வராத சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் பிற அதிகாரிகளின் வீடுகளில் பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் சிக்கின. மேலும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோரனை கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web