அட கொடுமையே.. கள்ளக்காதலர்களுக்குள் தகராறு.. தெருவில் சென்ற இளைஞர் குத்திக்கொலை!

 
உமாராணி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள தேவநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி(42). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் இறந்து விட்டார். இதனால் உமாராணி கோவையில் தங்கி, அங்கேயே வேலை பார்த்து தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார்.

சிதம்பரத்தை சேர்ந்த பெயிண்டரான கணேசன்(30) என்பவருடன் உமாராணிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அடிக்கடி பேசத்தொடங்கி நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதனிடையே உமாராணிக்கும், கணேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உமாராணி, கணேசனை விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளார்.

உமாராணி

இதையறிந்த கணேசன், உமாராணியை பார்ப்பதற்காக தேவநாயக்கன்பட்டி வந்துள்ளார். வந்த இடத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது. இதனை அறிந்த உமாராணியின் உறவினரான காளிதாஸ் என்பவர் அங்கு சென்றுள்ளார். அவர் கணேசனை அழைத்துச்சென்று பேருந்தில் ஏற்றி விட சென்றுள்ளார்.

காளிதாஸ் வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு கணேசனை தனது டூவீலரில் அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடையில் மதுவாங்கி இருவரும் குடித்துள்ளனர். மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காளிதாஸ் தன்னை தாக்கியதாக உமாராணிக்கு போன் மூலம் கணேசன் தெரிவித்துள்ளார்.

உமாராணி

இந்நிலையில் வாடகை காரில் அங்கு வந்த உமாராணி, இருவருக்கும் இடையே சமாதானம் செய்துள்ளார். அப்போது கணேசன், தான் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து காரில் உட்கார்ந்திருந்த காளிதாசின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அதிக ரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து தகவலறிந்து அங்குசென்ற வேடசந்தூர் போலீசார் காளிதாஸின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணேசனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web