அடேங்கப்பா.. 82 வயதில் சாதனை படைத்த மூதாட்டி.. பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!
தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் கோவையைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி 50 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கிட்டம்மாள் என்ற 82 வயது மூதாட்டி, தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்துவிட்டு வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது டெல்லியில் ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர் லிஃப்டிங் ஃபெடரேஷன்’ (‘Natural Strong Powerlifting Federation’) நடத்திய பளு தூக்குதல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் கோவையைச் சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி 50 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!