அடேங்கப்பா.. 10ஆம் வகுப்பில் 10 முறை தோல்வி.. 11வது முறையாக சாதனை படைத்த மாணவனுக்கு குவிந்த பாராட்டு!

 
 கிருஷ்ணா நாம்தேவ் முண்டே

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா நாம்தேவ் முண்டே என்ற மாணவர், பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஷ்வர் பள்ளியில் படித்து வருகிறார்.2018ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர், மனம் தளராமல் தொடர்ந்து தேர்வு எழுதினார்.

அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை தேர்வை எழுதி தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் 11வது முறையும் தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. ஆனால் இம்முறை மாணவர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இச்செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த பெற்றோர், மகனை மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதை பார்த்த கிராம மக்களும் மாணவனை தோளில் தூக்கி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web