அட கொடுமையே... மருமகளை 16 வருஷம் வீட்டிற்குள்ளேயே சிறை வைத்த மாமியார்!

 
அட கொடுமையே... மருமகளை 16 வருஷம் வீட்டிற்குள்ளேயே சிறை வைத்த மாமியார்!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 16 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே மருமகளை சிறை வைத்து கொடுமை செய்து வந்த மாமியார் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷன் லால் சாஹு. இவரது மகள் ராணு சாஹூ. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் கடந்த 2006ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் அவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் 2008ம் ஆண்டுக்கு பின்னர் ராணு சாஹூவை அவரது மாமியார் கொடுமைப்படுத்த தொடங்கியதாக தெரிகிறது. தன்னுடைய மகனிடமிருந்து மருமகளைப் பிரித்த மாமியார் அதன் பின்னர், கிட்டத்தட்ட 16 வருடங்களாக தனது மருமகள் ராணு சாஹூவை வீட்டிற்குள்ளேயே தனி அறையில் அடைத்து வைத்து, ஒரு கைதியைப் போல நடத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார்.  கணவன், உறவினர்கள் என யாரையும் பார்க்கவிடாமல் மருமகளை தனியறையில் அடைத்து வைத்து கொடுமை செய்து வந்துள்ளார்.  இதனால் ராணு சாஹூவின் உடல் நிலை மோசமாகி, எலும்பும் தோலுமாக உயிரிழக்கும் நிலைக்கே சென்றுள்ளார்.

பொதுமக்களுக்கு இந்த விஷயம் தெரியவந்த, சாஹூவை மீட்டு சிகிச்சை அளித்து கணவன் மீதும், மாமியார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அட கொடுமையே... மருமகளை 16 வருஷம் வீட்டிற்குள்ளேயே சிறை வைத்த மாமியார்!

இதையடுத்து போலீசார் அதிரடியாக அங்கு சென்று சாஹூவை மீட்டனர். அறைக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் சாஹூவின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 16 வருடங்களாக சிறைபிடிக்கப்பட்ட சாஹூ, உடல் மெலிந்து, எலும்புகளில் தோல் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில், பேசும் சக்தியையும் இழந்து, மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து அவரை  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!