அடப்பாவிங்களா... உடல் உறுப்பு விற்பனை... கோடிகளில் பணம் பார்த்த மருத்துவர்கள்... 7 பேர் கைது!

 
டெல்லி  உடல் உறுப்பு விற்பனை

மருத்துவர்களை கடவுளுக்கு ஒப்பானவர்களாக பார்க்கும் சமூகம் நம்முடையது. மகராசன்.. நல்லாயிருப்பான் என்றோ... கடவுளைப் போல அந்த டாக்டர் காப்பாற்றினார் என்றோ ஆயுசுக்கும் நெனைச்சிருக்கோம். இன்றைக்கும் நமது பெற்றோர்களிடம், சிறுவயதில் நம்மை ஏதோவொரு தருணத்தில் காப்பாற்றிய மருத்துவர் பற்றிய கதை இருக்கும். இந்நிலையில், மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை முறைகேடாக விற்பனை செய்து கோடிகளில் பணம் பார்த்த மருத்துவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பது உடல் உறுப்புகள் தானம் வழங்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தங்களது உறவினர் உயிரிழந்ததும், அந்த சோகத்திலும் கூட எங்கோ யாரோ ஒருவருக்கு உயிர் வாழ உதவ கூடும் என்கிற மனிதாபிமான அடிப்படையில் செய்கிற இந்த உடல் உறுப்பு தானம், பணக்காரர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிற வியாபாரமாக மாறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட  மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் உடல் உறுப்புகளை, உறுப்புகள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களது உறவினர்களின் சம்மதத்துடன் தானம் செய்வது சமீபகாலமாக மருத்துவ உலகில் ஒரு ட்ரெண்டாகி வருகிறது. உடல் உறுப்புகளை விற்பனைக்காக தானம் செய்வது சட்டப்படி கடுமையான குற்றமாகும். தலைநகர் டெல்லியில் மருத்துவர்கள் உட்பட ஒரு கும்பல் இதை செய்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது.

உடல் பரிசோதனை

லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை செய்து, வியாபார நோக்கத்திற்காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வர்த்தக நோக்கில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக இதுவரை மருத்துவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடல் உறுப்புகள்

ஒவ்வொரு மாற்று அறுவை சிகிச்சைக்கும் கும்பல் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறது. இந்த மாற்று அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பல் கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்த குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web