அட காவாலா... பள்ளி பாட புத்தகத்தில் தமன்னா.. பெற்றோர் கடும் எதிர்ப்பு!
தனியார் பள்ளியின் பாட புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த வாசகம் இடம் பெற்றுள்ளது பெற்றோர்கள் மத்தியில் கடும் சர்ச்சையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஹெப்பலில் உள்ள சிந்தி தனியார் பள்ளியின் 7ம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய வாசகம் இடம் பெற்றுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் பாட ப் புத்தகத்தில் நடிகை தமன்னா பற்றிய உரையை சேர்க்க பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது அதிருப்தியை பள்ளி நிர்வாகத்தினரிடம் தெரிவித்து புகார் கொடுத்தனர்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நடிகை தமன்னா பற்றிய உரையின் சில பகுதிகளும் ஊடகங்களில் பரப்பப்பட்டன. அவர் பிறந்த தேதி, அவர் நடித்த திரைப்படங்களின் விவரங்கள் பாட புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. நடிகை தமன்னா நடித்திருக்கும் தெலுங்கு மற்றும் தமிழில் திரைப்படங்கள் குறித்து பாட புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

தமன்னாவின் இடம்பெயர்வு, சமூகம் மற்றும் மோதல் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. இதில் தமன்னாவுடன் பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங்கும் இடம் பெற்றுள்ளார். தமன்னாவை பாடத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அவரைப் பற்றி எங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று கூறி பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக குரல்களைப் பதிவு செய்தனர். நடிகை தமன்னாவிடம் இருந்து எங்கள் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இது குறித்து பெற்றோர்கள் குழந்தை உரிமை ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்திடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
