தள்ளாடும் தமிழகம்... தலைக்கேறிய போதை.. நடுரோட்டில் இளம்பெண் ரகளை.. தட்டிக் கேட்டவருக்கு அடி உதை!

 
அங்குலட்சுமி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்குலட்சுமி (35). இவரது முதல் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் அங்குலட்சுமிக்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அங்கு லட்சுமிக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ள நிலையில் அவர் சிறு சிறு வேலைகளை செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தள்ளுவண்டி மூலம் சோளம் விற்பது உள்ளிட்ட  வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றறி வந்துள்ளார். இந்த நிலையில், முதல் கணவருக்கு பிறகு தொடர்பு ஏற்பட்ட இளைஞர் மூலமாக, அங்குலட்சுமிக்கு கஞ்சா மற்றும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
அங்குலட்சுமி

இந்த நிலையில், நேற்றிரவு இரவு 8 மணி அளவில், தான் வசிக்கும் குமாரபாளையத்திலிருந்து, ஈரோடு மரப்பாலம் பகுதிக்கு வந்தார். அப்போது தன்னிடம் இருந்த பணத்தை கொண்டு மது அருந்திவிட்டு, கஞ்சாவை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் தலைக்கேறிய போதையில் தடுமாறி நடந்துள்ளார். 

மரப்பாலம் பகுதியில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாநகரின் பிரதான மையப் பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பிற்கு வந்தார். அப்போது சாலையில் சென்றவர்களிடம் ரகலையில் ஈடுபட்டதுடன், அரசு பேருந்தை வழிமறித்து நின்று சிறிது நேரம் ஆட்டம் போட்டு உள்ளார்.

அவரிடம் சென்று விசாரித்தவர்கள், விலகிப்போகுமாறு கூறியவர்களை ஆபாசமாக பேசியுள்ளார். ஒருவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறத. இதனையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில்  இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு லட்சுமியை சமாதானப் படுத்தமுயன்றனர். ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் அங்கு வருவோர் போவோரை எல்லாம் அடிக்கப் பாய்ந்தார். சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு போலீசார் அங்குலட்சுமியின் கைகளை பின்புறமாக துப்பட்டாவால் கட்டி, ஆட்டோவில் ஏற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குலட்சுமி

இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள புறநகர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அங்கும் தரையில் உருண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வலுக்கட்டாயமாக மருத்துவனமனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட அவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.  ஆனால், அவரது குடும்பத்தினர் யாரும் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பில் அவர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web