செம... கிலோ ரூ30க்கு வெங்காயம்.... பசுமை பண்ணைக் கடைகளில் அதிரடி விற்பனை!!

 
சின்ன வெங்காயம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை சதமடித்துள்ளது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவகங்களில் பல வெங்காயத்தின் விலை உயர்வால் வெங்காய தோசை உட்பட பல வெங்காயத் தேவை உள்ள உணவுகளை தற்காலிமாக நிறுத்தியுள்ளன. அத்துடன் வெங்காயத்திற்கு பதிலாக முட்டை கோசை பயன்படுத்தி வருகின்றன.

வெங்காயம்

மேலும் சில கடைகளில் வெங்காயத்தின் விலை உயர்வால் உணவுகளின் விலை உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசுக்கு பொதுமக்கள் பெண்கள், இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசுமை பண்ணை கடைகள்

இவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலும்  வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயத்தை ரூ.30க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தேவை ஏற்பட்டால் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் வெங்காயத்தை  விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web