பொங்கல் பரிசுத்தொகுப்பு... தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகம் துவங்கியது!
தமிழகத்தில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு, வேட்டை, சேலை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் போது, ஒரே நேரத்தில் பொதுமக்கள் கடைகளில் குவிவதைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசலை தவிர்த்து எளிதில் பரிசுத்தொகுப்புகளைப் பெற்றுச் செல்லவும் வசதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அந்தந்த தேதிகளில் பொங்கல் பரிசு தொகை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இன்று வீடு வீடாக சென்று நியாய விலை கடை பணியாளர்கள் டோக்கன் விநியோகத்தை மேற்கொண்டனர். பரிசுத்தொகுப்புக்கான டோக்கனைப் பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின் இந்த திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணியில் எவ்வித இடையூறுமின்றி குறிப்பிட்ட தினங்களுக்குள் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதால் அனைத்து நியாயவிலைக் கடைகளும் இந்த நாட்களில் விடுமுறை இல்லாது இயங்க கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.எனினும் டோக்கன் பெற்ற பொதுமக்களிடையே இந்த வருடம் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் வழங்கப்படாதது குறித்த அதிருப்தி நிலவி வருவது டோக்கன் பெறுகையில் எதிரொலிக்கிற
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!