தியாகிகள் நினைவு ஸ்தூபியில் தரையில் ஆம்லெட் ... சமூக ஆர்வலரை தட்டித் தூக்கிய போலீசார்!

 
ஆம்லேட்

 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருகிறது.அதிலும் குறிப்பாக  சேலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரிக்கும் அதிகமாகவே  பதிவாகி வருகிறது. வெப்பக்காற்றில் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆம்லேட்
இந்நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சமூக ஆர்வலரான கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் நிர்வாகி பிரபாகரன்,  சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே முட்டையை நடுரோட்டில் போட்டு ஆம்லேட் செய்து காட்டினார். அதே போல் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் உள்ள கல்லில், அவர் முட்டையை உடைத்து ஊற்றியதில்  அது ஆப்பாயிலாக மாறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதி  போலீசார்  அங்கு விரைந்து வந்தனர். தியாகிகள் நினைவு ஸ்தூபியில் ஆம்லெட் போடலாமா? எனக் கேள்வி எழுப்பினர்.

வெயில்

அத்துடன்  ஆம்லெட் போட்ட பிரபாகரனையும், அவரது நண்பரையும் ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  சமூக ஆர்வலர் பிரபாகரன், பொதுமக்கள் வெளியே வந்து வெயிலினால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் தான்  ஆம்லெட் போட்டு வீடியோ பதிவிட்டேன்  எனக் கூறினார். தெரியாமல் தியாகிகள் நினைவு தூபியில் ஆம்லெட் போட்டு விட்டேன். இனி இது போன்ற செயலில் ஈடுபட மாட்டேன்' என மன்னிப்பு கோரினார். இதனையடுத்து போலீசார் அவருக்கு  அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வெயிலுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆம்லெட் போட வந்த சமூக ஆர்வலர், போலீசில் சிக்கிக்கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web