அதிகாலையில் அதிர்ச்சி... ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இளைஞர் பலி... 8 பேர் படுகாயம்!

 
பேருந்து விபத்து


பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே ஆம்னி பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து  கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.  பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில்  இன்று அதிகாலை ஆம்னி பேருந்து  இன்று வேகமாக  சென்று கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில்  இருந்து சென்னைக்கு சென்ற இந்த ஆம்னி பேருந்தை  கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியில் வசித்து வரும்  அர்ஜுனன் மகன் 36 வயதான அமர்நாத் ஓட்டுனராக இருந்தார்.  

விபத்து


அப்போது பாடாலூர் தனியார் பள்ளி அருகே ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்த போது, மேம்பாலப்பணிக்காக  தோண்டப்பட்ட சாலையோர பள்ளத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து பாய்ந்தது. சம்பவ இடத்தில் பேருந்தில்  பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மருதங்கோடு  25 வயது ரத்தினன் மகன் அஜின் மோன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக வந்த காவல்துறை விபத்தில் காயம் அடைந்த 8 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளது.  அத்துடன் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!