19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் முழு பணிநாளாக செயல்படும்... லிஸ்ட் இதோ!

 
பள்ளிகள்

 தமிழகம் முழுவதும் நாளை ஜூன் 10ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து பள்ளிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டு வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது.  தாமதமாக பள்ளிகள் தொடங்கப்படுவதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் பணிநாட்களாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள்

அதன்படி நடப்பு கல்வியாண்டில் 19 சனிக்கிழமைகள்  பள்ளிகளுக்கு பணிநாட்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 29, ஜூலை 13, ஆகஸ்ட் 10, 24, செப்டம்பர் 14, 21, அக்டோபர் 5, 19, நவம்பர் 9, 13, டிசம்பர் 14, 21 மற்றும் 2025 ம் ஆண்டு ஜனவரி 11, பிப்ரவரி 1, 15, 22, மார்ச் 1, 22, ஏப்ரல் 5 ஆகிய 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.  இந்த கல்வியாண்டு பள்ளி மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைத்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் விடுமுறை குறையலாம் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web