ஜூலை 13ம் தேதி வங்கியின் இந்த சேவைகள் நிறுத்தம்... பணப்பரிவர்த்தனைகளை திட்டமிட்டுக்கோங்க!

 
யுபிஐ

 ஜூலை 13ம் தேதி சனிக்கிழமை   UPI அமைப்புகள் வேலை செய்யாது என HDFC வங்கி அறிவித்துள்ளது. ஜூலை 13 ம் தேதி  UPI அமைப்பில் ஒரு சில மேம்பாடுகளை செய்ய இருப்பதால் அதன் சேவைகளில் தற்காலிக தடை ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது.   வங்கியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த UPI அமைப்பு மேம்பாடு திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

யுபிஐ
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிகாலை 3 மணி முதல் காலை 3:45 வரை மற்றும் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:45 வரை செயல்படாது எனத் தெரிவித்துள்ளது. நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் பயன்படுத்துவதற்கு கிடைக்காது. கூடுதலாக IMP, NEFT, RTGS, HDFC வங்கியின் ஒரு அக்கவுண்ட்டில் இருந்து மற்றொரு அக்கவுண்ட்டிற்கு செய்யப்படும் ஆன்லைன் டிரான்ஸ்ஃபர்கள் மற்றும் கிளை ட்ரான்ஸ்ஃபர்கள் போன்ற அனைத்து நிதி மாற்று சேவைகளும் கிடைக்கப் பெறாது.


வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை  மேம்படுத்துவதற்காக வங்கி ஆனது அதன் கோர் பேங்கிங் சிஸ்டத்தை புதிய பிளாட்ஃபார்முக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலமாக வங்கி சேவைகளின் செயல்திறன் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாத குழப்பங்களை தவிர்ப்பதற்காக இந்த மேம்பாட்டை வங்கி 2 வது சனிக்கிழமை அதாவது வங்கி விடுமுறை நாளில் திட்டமிட்டுள்ளது.  பணப்பரிவர்த்தனைகளை  முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அதன் வாடிக்கையாளர்களுக்கு  வங்கி அறிவுறுத்தியுள்ளது.

யுபிஐ
முன்னதாக ரூ100 க்கும் குறைவான UPI பரிவர்த்தனைகளுக்கு இனி SMS அலர்ட்டுகள் அனுப்பப்படாது என்ற தகவலை HDFC வங்கி வெளியிட்டு இருந்தது. இப்போது ரூ100க்கும் அதிகமான தொகையை வேறொருவருக்கு அனுப்பினாலும், பேமெண்டாக செலுத்தினாலும் ரூ500க்கும்  அதிகமான பணத்தை பெறும்போது மட்டுமே SMS நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பி வைக்கப்படும். அதே போல் இனி  அனைத்து UPI பரிவர்த்தனைகள்  சம்பந்தமான தகவல்களை இமெயில் மூலமாக தொடர்ந்து அனுப்பும் என்பதையும் வங்கி உறுதி செய்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web