பள்ளி ஆசிரியர் வெட்டிப் படுகொலை... பள்ளி திறந்த முதல் நாளே விபரீதம்!

 
கண்ணன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.பாப்பான்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மேல்நிலை ஆசிரியராக கண்ணன் (51) பணியாற்றி வந்தார். இன்று பள்ளி திறக்கப்பட்டதால் கண்ணன் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கே.பாப்பான்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ​​கே.பாப்பாங்குளம் அருகே இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆசிரியர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கமுதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கண்ணனை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரியல் எஸ்டேட் மற்றும் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web