எந்தெந்த கிழமைகளில் என்ன விரதமிருந்தா முழு பலன்கள் கிடைக்கும்?!

 
இன்று குழந்தை வரம் அருளும் சஷ்டி விரதம் !

என்னென்ன கிழமைகளில் என்ன விரதம் இருந்தால், எப்படி விரதம் இருந்தால் முழு பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க. நாளும் கிழமையும் நலிந்தோறுக்கு இல்லை என்று இதைப் புறந்தள்ளாமல் முழுவதுமாக படிச்சுப் பாருங்க. தினந்தோறும் கடவுளை வழிபட உகந்த நாள் தான் என்றாலும் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப அதற்குரிய கிழமைகளில், நட்சத்திரத்தில் செய்கிற பிரார்த்தனைகளுக்கு பலன்கள் அதிகம்.

அப்படி குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்திட சிறப்பான பலன்களை பெறமுடியும் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என அறிந்து அதனை கடைப்பிடிக்க கூடுதல் பலன்களை பெறலாம்.

எந்தெந்த  கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

அதில் மாதம் முழுவதும் கடைப்பிடிக்கும் ஒரு வகையான சந்திராம்ச விரத முறையும் உண்டு. அதாவது சந்திரனின் பிறை வளர்வதற்கு ஏற்ப உணவின் அளவை முறைப்படுத்தி விரதம் இருப்பதற்கு சந்திராம்ச விரதமுறை. இதில் அமாவாசை அன்று முழு நாளும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு கவளமாக படிப்படியாக உணவின் அளவை அதிகரித்து பௌர்ணமியில் முழு உணவாக உண்பது தான் விரதமுறை. பின்னர், படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று முழுவிரத தினமாக அமையும்.

எந்தெந்த  கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

கிழமைகளுக்கான பலன்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதால் நீண்ட கால நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வை பெற முடியும்.

திங்கட்கிழமைகளில் இருக்கும் விரதத்தினால் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.

செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும்.

புதன்கிழமைகளில் விரதம் இருப்பதால் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.

வியாழக்கிழமை விரதம் இருப்பதால் குழந்தைப் பேறு சந்தான பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் தம்பதியர்கள் ஆதர்சத்துடன் திகழ்வதுடன் அவர்களின் ஆயுள்பலம் கூடும்.

சனிக்கிழமை விரதம் இருப்பதால் வேலை, தொழில் விருத்தி அடைந்து செல்வம் பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web