ஓணம்.. சுபமுகூர்த்தம்... இன்று இரவு முதல் தமிழகம் முழுவதும் 2910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
பேருந்து

சுபமுகூர்த்தம், திருவோணம், மீலாடி நபி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து   அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், “தொடர் 3 நாட்கள் விடுமுறையை ஒட்டி  இன்று, நாளை, நாளை மறுநாள் என சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

இதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 360 பேருந்துகளும், நாளை 4/09/2025 (வியாழக்கிழமை) அன்று 710 பேருந்துகளும், 05/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து சொகுசு

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு  இன்று 80 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) மற்றும் 05/09/2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 03/09/2025 மற்றும் 04/09/2025 ஆகிய நாட்களில் 25 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பேருந்து யுபிஐ
ஞாயிற்றுக்கிழமை  சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்று 17,632 பயணிகளும், 04/09/2025 அன்று 23,032 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,271 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,317 பயணிகளும் ஞாயிறு அன்று 20,740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இதனையடுத்து  தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?