மீண்டும்.. மீண்டுமா.. வந்தே பாரத் ரயில் உணவில் கிடந்த கரப்பான் பூச்சிகள்.. ஷாக் ஆன பயணிகள்!

நேற்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு நோக்கி வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. காலை 8 மணிக்கு செங்கனூர் வந்தடைந்ததும் ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. காலை உணவாக வழங்கப்பட்ட இடியாப்பம் பொட்டலத்தை திறந்து பார்த்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உணவில் இருந்து கரப்பான் பூச்சிகள் சிதறியதாக தெரிகிறது. அப்போது ரெயில்வே ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து எர்ணாகுளத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ரயில்வே கேட்டரிங் ஒப்பந்ததாரர் கூறியதாவது: இந்த உணவுகள் தயாரிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. அவை கவனமாக கண்காணிக்கப்பட்டு நேர்த்தியாக பேக் செய்யப்படுகின்றன. ரெயிலில் உணவு பொட்டலங்களை ஏற்றியபோது, அங்கிருந்து கரப்பான் பூச்சிகள் பாக்கெட்டுக்குள் புகுந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!