டிச.30 முதல் குமரியில் 3 நாட்கள் வள்ளுவா் சிலை வெள்ளி விழா... நிகழ்ச்சிகள் விவரம்... குவியும் சுற்றுலா பயணிகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரையில் வள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “முதல் நாள் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் வரும் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது.
வள்ளுவா் சிலையையும் விவேகானந்தா் பாறையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். திருக்குறள் நெறிபரப்பும் 25 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் நாளின் இறுதி நிகழ்வாக, குறளை மையப்படுத்தும் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் டிசம்பர் 31ம் தேதி தொடா்ந்து நடைபெறவுள்ளன. திருவள்ளுவா் தோரண வாயிலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா். அத்துடன் வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டு, திருக்குறள் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி உரையாற்றவுள்ளாா். நிறைவு நாள் நிகழ்ச்சிகள் ஜனவரி 1ம் தேதி நடைபெறவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
