தனியார் பேருந்து மோதி ஒன்றரை வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு!

 
வேலூர்
 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல் பட்டி பகுதியில் இயங்கும் தனியார் ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் பேருந்து சோக விபத்துக்குக் காரணமானது. செட்டிகுப்பம் வன்னியர் வீதி பகுதியில் நேற்று மாலை பேருந்து சென்றபோது, வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி மோகனின் ஒன்றரை வயது பெண் குழந்தை துர்கா ஸ்ரீ எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் குடியாத்தம் காவல் துறையினர் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பினர். இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ்

இதனால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக நிலவியது.பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் நிலைமை அமைதியானது. குடியாத்தம் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!