ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 269 வாக்குகள்... கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு!
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் ’ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இருந்த போதிலும் ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 220 பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எதிராக 149 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். மக்களவையில் நடந்த மின்னணு வாக்கெடுப்பை அடுத்து மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
