அதிர்ச்சி... மயோனைஸ் சாப்பிட்டு ஒருவர் பலி...75 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
மயோனைஸ்
 

உணவகங்களில் பொரித்த பண்டங்களின் சுவையை கூட்ட மயோனைஸ் தரப்படுவதுண்டு. இதனால் சாப்பிடும் பண்டங்களின் ருசி கூடும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பர். சவுதி அரேபியாவில் கடந்து சில தினங்களுக்கு முன்பு உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த மயோனைஸ் சாப்பிட்ட 75 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மயோனைஸில் உயிரைக்கொல்லும் விஷத்தன்மை கொண்ட பாக்டீரியா இருந்ததாக உறுதி செய்யப்பட்டது.  

மயோனைஸ்

அதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட பிராண்டு மயோனைஸ்க்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்தது.குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி அபுதாபி அரசு இந்த குறிபிட்ட பிராண்ட் மயோனைஸ் குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட பிராண்ட் மயோனைஸ் அபுதாபி சந்தையில் விற்கப்படுவதில்லை எனவும்,  நகரத்தில் இருக்கும் விற்பனை நிலையங்களுக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.  


பாதுகாப்பற்ற மற்றும் ஆரோக்கியமற்ற தயாரிப்புகளுடன் எமிரேட்டின் சந்தைகளில் இருக்கும் இம்மாதிரியான உணவுப்பொருளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் நுகர்வோருக்கு உறுதியளித்து இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ரியாத் பகுதியில் ஹம்பர்கினி உணவகத்தில் இருந்த மயோனைஸ் சாப்பிட்ட பலருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.   75 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து  சவுதி அரேபியா முழுவதும் குறிப்பிட்ட மயோனைஸ் பிராண்ட் விநியோகம் நிறுத்தபட்டது.

மயோனைஸ்
இச்சம்பவம் குறித்து சவுதியின்  உணவு மற்றும் மருந்து ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  உணவகத்தில் வழங்கப்பட்ட பான்டும் மயோனைஸ் மாதிரியில் பொட்டுரிலிம் பாதிப்பை ஏற்படுத்தும் க்ளோஸ்ட்ரிடியம் போட்யூடிலினம் பாக்டீரியா இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே இந்த மயோனைஸ் உட்கொண்ட அனைவருக்கும் உடலில் பாதிப்பை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web