அம்...மாடியோவ்!! ரூ1.25கோடி உண்டியல் காணிக்கை!! ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவில் மாத வசூல்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார மாவட்டங்களான ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருடம் முழுவதும் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.
பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் நேர்த்திக்கடனாக காணிக்கைகளை செலுத்துவர். இதற்காக கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 20 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. மாதம் தோறும் இந்தக் கோவிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கைகள் எண்ணப்படுவதும் வழக்கமே. அந்த வகையில் நேற்று முன் தினம் மே 23ம் தேதி செவ்வாய்கிழமை கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
உண்டியல் காணிக்கை எண்ணப்படும் போது பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சாமிநாதன், சத்தியமங்கலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவமணி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பணியில் வங்கி அலுவலர்கள், பக்தர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மே மாத உண்டியல் காணிக்கை ரூ1.17 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இவைகளுடன் 568 கிராம் தங்கம், 1230 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!