அம்மாடியோவ்.. ஒரு கிலோ மாம்பழம்.. 2,50,000 ரூபாய்.. ஒரேயொரு பழத்தின் விலை ரூபாய் 40,000!

 
மாம்பழம்

கோடைகாலம் வந்து விட்டால் மாம்பழ சீசனும் களைகட்டி விடும். தெருவுக்கு தெரு மாம்பழக்கடைகள் தள்ளுவண்டிகளில் விற்பனை கனஜோராக களைகட்டி வருகின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை பலரும் மாம்பழப் பிரியர்கள் தான்.  மாம்பழம் சுவை, தரத்தை பொறுத்து  பல வகைகள் உண்டு.

அதிலும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.  இந்த வகை மாம்பழங்களுக்கு எப்போதுமே கடும் கிராக்கி தான். இவை ஜப்பானில் பரவலாக வளர்க்கப்படுகிறது. அதன் விலையும்  ஒரு பவுன் தங்கத்தை விட அதிகமாக உள்ளது.

மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.40,000 வரை விற்கப்படுகிறது. இப்பழம் கிலோ ஒன்றுக்கு 2.5 லட்சம் முதல் 2.7 லட்சம் ரூபாய் விலை போவதுண்டு. பொதுவாக மாம்பழம் கிலோ ரூ 100 முதல் ரூ200 வரை இருக்கும். அதிகப்பட்சமாக ரூ.300, ரூ.4000 வரை விற்கப்படலாம். ஆனால் மியாசாகி மாம்பழத்தின் விலை தங்கத்தின் விலைக்கு சமமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


தற்போது கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டத்தில் கண்காட்சியில் இந்த மாம்பழம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. மாம்பழம் சாகுபடி பருவத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொப்பலில் மாம்பழ மேளாவை தோட்டக்கலைத்துறை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு மாம்பழ மேளா  மே 23ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடக்கிறது. இந்தாண்டு மாம்பழ மேளாவில் விலை உயர்ந்த மாம்பழமான மியாசாகியை மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஒரு மாம்பழத்தை மட்டும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கண்காட்சிக்கு கொண்டு வந்தனர். 

இந்த அதிசய மாம்பழத்திற்கு அருகில் நின்று பொதுமக்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இதனால் இந்த சிவப்பு மியாசாகி மாம்பழம் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இத்துடன் இந்த கண்காட்சியில்  இங்கு கொப்பல் கேசர், பென்ஷன், தாஷேரி, ஸ்வர்ணரேகா, அல்போன்சா, தோதாபுரி, ரசமாரி, புனரி மற்றும் மல்லிகா போன்ற பிரபலமான ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மேளாவில் 51 விவசாயிகள் மாம்பழங்களை விற்பனை செய்ய ஸ்டால்களை அமைத்துள்ளனர். இந்த கண்காட்சி மேளா குறித்து பழச்சாறு கடை நடத்தி வரும் ராமகிருஷ்ண பெவினகட்டி கூறுகையில், "ரூ.40 ஆயிரம் விலையுள்ள ஒரு மாம்பழத்தைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மாம்பழம்

மியாசாகி ஒரு கிலோ ரூ.2.50 லட்சம் என மேளாவில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேளாவுக்குப் பிறகு இந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவார்கள் என அதிகாரியிடம் கேட்டோம். அவர் சிரித்துக்கொண்டே  இந்த சீசனுக்கு இதுவரை  ஒரு மாம்பழம் மட்டுமே வந்தது.  "கொப்பல் மாவட்டத்தில் மியாசாகி சாகுபடியை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ரகத்தை விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் வளர்க்க இத்துறை வழிகாட்டும்" எனக் கூறியுள்ளார்.  இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் இந்த மாமரத்தை பாதுகாக்க 3 காவலாளிகள் மற்றும் 6 வேட்டை நாய்கள் நியமித்து உள்ளார். இது குறித்து கடந்த வருடம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web