மேலும் ஒரு உயிரை பலி வாங்கிய நீட்.. கோட்டாவில் தொடரும் அவலம்!

 
நீட் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்த மாணவி பைஷா திவாரி (வயது 18). 12ம் வகுப்பு படித்துள்ள இவர், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென மாணவி தான் வசிக்கும் கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து குதித்தார். தற்கொலைக்கு முயன்ற மாணவியை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றனர்.

குதித்து தற்கொலை

கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு மட்டும் கோட்டாவில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது மாணவர்களிடையே மனநலம் மற்றும் கல்வி அழுத்தத்தின் பிரச்சினையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web