மேலும் ஒரு மாதம்.. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் இழுபறி!

 
சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோட்  அகீயோர் போயிங் ஸ்டார்லைனரில் இருவரும் கடந்த 7ம் தேதி சர்வேதச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அவர்கள் 14ம் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்தது. இருப்பினும், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் கசிவு மற்றும் உந்துவிசையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பணி சிறிது நேரம் தாமதமானது. இதன்படி கடந்த 20ம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

சுனிதா வில்லியம்ஸ்

ஆனால் ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால்,  வீரர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்குப் பிறகு, ஜூலை 2 ஆம் தேதி அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களும் தீர்க்கப்பட்டு இரண்டு வீரர்களும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது. ஆனால் அதை நாசா ஏற்கவில்லை,இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்வதற்காக குறைந்தது 30 நாட்கள் தேவைப்படும் என்றும் ஒரு மாதத்திற்கு பின் தான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்

இதற்கிடையில் நாசா அதிகாரி ஸ்டீவ் ஸ்டிச் கூறியதாவது, ஸ்டார்லைனர் பயணகாலத்தை 45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோட் அழைத்து வருவதில் அவசரம் வேண்டாம் என்றும் கூறினார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web