கள்ளச்சாராயத்தால் மேலும் ஒருவர் பலி... பெரும் சோகம்!

 
கள்ளச்சாராயம் பலி

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தியதில் 65 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர்.  இதில் சிலருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அதே போல் மீண்டும்  ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில்  கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவர்  ஜெயராமன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கள்ளச்சாராயம்

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. டி. குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த அவர் உட்பட 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  

மரணம் கள்ளச்சாராயம்
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் அதேபோன்று சம்பவம் தற்போது மீண்டும் ஒரு பலி தொடர்ந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web