ஆன்லைன் விளையாட்டால் மேலும் ஒரு விபரீதம்... இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 
ஆன்லைன்

 ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை தொலைத்த பலர் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர். எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் தற்கொலைகள் தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய நபர் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் மோசடி

சென்னை புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும்  இளைஞர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடன் தொகையை செலுத்திய போதும், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு  மிரட்டல் விடுக்கப்பட்டது.  ஆன்லைன் கடன் செயலி தரப்பினர் விடுத்த மிரட்டலால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனையடுத்து இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web