ஒரே நாடு ஒரே தேர்தல்... மசோதா விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கம்!

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

2024 பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில்  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  “ஒரே நாடு, ஒரே தேர்தல்”  திட்டம், தேர்தலுக்கான உழைப்பு மற்றும் செலவினங்களை குறைக்கலாம் என  ஆதரவாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.  அரசியல் தலைவர்கள் பலரும் இந்த திட்டம் செயல்படுத்தபட்டால்  இடைத்தேர்தல்களின் அவசியம் குறையும். ஆனால் இதனை செயல்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.  

ஒரே நாடு ஒரே தேர்தல் ஸ்டாலின்

இந்த திட்டத்திற்கான மசோதா டிசம்பர் 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட போதே எதிர்ப்பு அதிகமாக வந்த நிலையில், இதற்கு தனியாக 39 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கூட்டுக்குழுவை அமைத்து, மசோதாவை நுணுக்கமாக ஆராய முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமின்றி அந்த கூட்டுக்குழுவில் இந்த திட்ட மசோதாவின் விதிகள் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

தேர்தல் வாக்குபதிவு வோட்டு தேர்தல்

இந்நிலையில், பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. 39 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராக பாஜக எம்பி பிபி சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதாவின்  விதிகள் மற்றும் நடைமுறை அம்சங்களை குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web