பரபரப்பு... வெள்ளைமாளிகை நுழைவாயில் மீது கார் மோதி கோர விபத்து ஒருவர் பலி!

 
வெள்ளை மாளிகை

 அமெரிக்க அதிபர் மாளிகையான  வெள்ளை மாளிகை எப்போதுமே பல அடுக்கு பாதுகாப்புக்களை  கொண்டது. இந்த  மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுற்றுச்சுவரை ஒட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையும் உள்ளது. இந்த சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஒரு கார், திடீரென வெள்ளை மாளிகையின் நுழைவு வாயிலில் பாய்ந்தது. இதனையடுத்து உடனடியாக  பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சேர்வதற்குள்  அந்த கார், பாதுகாப்பு தடை மீது மோதி நொறுங்கியது.  

வெள்ளை மாளிகை

காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 15-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபுள்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்பு தடையில் வாகனம் மோதியதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.  இது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற அச்சம் நிலவியது.  

அமெரிக்கா போலீஸ்

இதனால் சிறிது நேரம் வெள்ளை மாளிகை வளாகம் முழுவதுமே பெரும் பரபரப்பானது. பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் நடந்தது விபத்துதான் என காவல்துறை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும்,  இச்சம்பவம் குறித்து  விசாரணை நடத்தப்படும் எனவும்  உளவுப் போலீஸ் ரகசிய சேவை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web