பொதுமக்களே உஷார்... நிஃபா வைரசால் ஒருவர் உயிரிழப்பு..!
கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் 'நிபா' வைரஸ் பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நிஃபா தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இளைஞர் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் 'நிபா' வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில் "கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம் உட்பட மாவட்டங்களில் நிஃபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாராவது சிகிச்சைக்கு வந்தால், அது குறித்து தகவல் தெரிவிக்க அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
