ஒரே ஒரு குடும்பத்திற்காக ஒரு வாக்குச்சாவடி... தேர்தல் ஆணையம் அதிரடி!!

 
35 பேர் வாக்குச்சாவடி

இந்தியாவில்  5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.  இதனையடுத்து  இந்த மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல்  வாக்குச்சாவடி , வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரிபார்கக்ப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  ராஜஸ்தான் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லையோரம் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வாக்குச்சாவடி இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. காரணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வாக்காளர்களுக்காக இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தில்  இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி ’பட்மர் கா பார்’ என்ற குக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு  மொத்தம் 35 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர்.  தேர்தல் வந்தால் இவர்கள் அனைவரும் 20 கிமீ அப்பால் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்றாக வேண்டும்.

ராஜஸ்தான்


 போக்குவரத்து வசதிகள் அற்ற அந்த குக்கிராமத்தில் இருந்து பொடிநடையாகவோ, ஒட்டகம் மீதேறியோ பயணப்பட்டு தான் வாக்குச்சாவடியை அடைய முடியும்.   இதனால் வாக்குச்சாவடிக்கு எளிதில் ஆண்கள் பயணப்பட, பெண்கள் தயக்கத்துடன் கிராமத்திலேயே தங்கிவிடுவார்கள். 17 பெண், 18 ஆண் என மொத்தம் 35 வாக்காளர்களைக் கொண்ட, இந்த கிராமத்தினருக்கான வாக்குச்சாவடி, கடந்த தேர்தல் வரை 20 கிமீ அப்பால் இருந்தது.தற்போது முதல்முறையாக கிராமத்திலிருக்கும் பெண்களும் எளிதில் வாக்களிக்கும் வகையில், அந்த குக்கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கப்படும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

BREAKING! வாக்குப்பதிவு தொடக்கம்! நீண்ட வரிசையில் திரண்ட வாக்காளர்கள்!

அதன்படி  35 வாக்காளர்களுக்கான ஒரு  தனி   வாக்குச்சாவடி அங்கே அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் மிகச்சிறிய வாக்குச்சாவடி என்ற சிறப்பும் இந்த வாக்குச்சாவடிக்கு கிடைத்துள்ளது.  தற்போது 5 மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் வரிசையில், நவம்பவர் 25ம் தேதி   ராஜஸ்தானின் இந்த எல்லையோர கிராமத்திலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கிராமத்தின் 35 பேருக்கான இந்த வாக்குச்சாவடியில், ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விடும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த கிராமத்தின் பெண் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web