நாளை முதல் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயிலுக்கு ஒரே டிக்கெட்!

 
பயண டிக்கெட்
 

சென்னை முழுக்கவே வேற லெவலில் மாறப் போகுது. இனி எதில் டிக்கெட் கட்டணம் குறைவு என்று யோசிக்க தேவையில்லை. ஒரே டிக்கெட். புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என்று நமக்கு வசதியான, செல்லும் இடத்திற்கு அருகில் இறங்கிக் கொள்வது போல ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.யெஸ்.. வரும் ஜூலை முதல் சென்னையில் பொதுப்பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியது.

இந்நிலையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். 

மின்சார ரயில்

இதன் மூலம் பொதுப் போக்குவரத்து மாநகர பகுதியில் மேலும் எளிமையாக்கப்படும் , எந்தெந்த பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் எப்படி பயணம் மேற்கொள்ள வேண்டும் எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது குறித்த  LIVE TIME விவரங்களும் செயலில் மூலம் பயணிகள் தெரிந்துகொள்ளவும் முடியும்.ஏற்கனவே சென்னை மாநகரில் மெட்ரோ நிறுவனம் மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்திற்கான ஒரே பயண அட்டை திட்டம்  பாரத் ஸ்டேட் வங்கியின் மூலம்  சிங்காரச் சென்னை பயண அட்டை என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.  

ரயில் டிக்கெட் புக்கிங்
தற்போது  செயலி சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது ஜூலை இறுதியில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த டிக்கெட் ஆப் மூலம் பயணிகள் தங்கள் பயண தொடக்கம்  மற்றும் இலக்கை தேர்ந்தெடுக்க வேண்டும், செயலி குறைந்த நேரம் மற்றும் செலவில் செல்லக்கூடிய அனைத்து சாத்தியமான போக்குவரத்து வழிகளையும் காட்சிபடுத்தும். கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை செல்ல வேண்டும் எனில் பேருந்து, மெட்ரோ மற்றும் ஆட்டோ ஆகியவற்றின் இணைப்பு வழியைக் காண்பிக்கும் இதன் மூலம் எளிமையான முறையில் பயணிக்கலாம்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது