குளத்தில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

 
கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சேது வீட்டில் இன்று மதியம் குடும்பத்தினர் தங்கள் வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரத்தில், சேதுவின் ஒன்றரை வயது மகள் தர்ஷினி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தை எங்கும் தெரியாத நிலையில் பெற்றோர் பதறி தேடத் தொடங்கினர்.

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

பின்னர் வீட்டு அருகே உள்ள குளத்தில் குழந்தை தவறி விழுந்தது தெரிய வந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை மரணம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தை உயிரிழப்பு

தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கினர். வீட்டு அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த இந்த சம்பவம், சிறுவர் பாதுகாப்பில் மேலும் கவனம் தேவை என்பதை நினைவூட்டுவதாக உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க