அதிர்ச்சி... எகிறப் போகுது சின்ன வெங்காயம் விலை... மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

 
சின்ன வெங்காயம்
 சின்ன வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்து உச்சத்துக்கு சென்றுள்ள நிலையில், மத்திய அரசுக்கு விவசாயிகள் 2 விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி போன்ற மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் நாம் பயன்படுத்துவதைப் போலவே வடஇந்தியாவிலும் சின்ன வெங்காயத்தை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில்லாமல் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அதிகளவில் சின்ன வெங்காயம் ஏற்றுமதியாகின்றன.

வெங்காயம் காய்கறி கடை கோயம்பேடு சந்தை
இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த தடையை சமீபத்தில் நீக்கியிருந்தது. ஆனால், பெரிய வெங்காயத்தை போலவே, சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதிக்கும் சேர்த்து 40 சதவீதம் வரியை மத்திய அரசு விதித்துள்ளது. விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான டன் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த 40 சதவீதம் வரி விதிப்பு இல்லாமல் இருந்திருந்தால், ரூ.20க்கே விற்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். மத்திய அரசு விதித்திருக்கும் 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காய விவசாயத்தில் நஷ்டமே ஏற்படுகிறது என்று விவசாயிகள் புலம்புகின்றனர். 

சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்திற்கும், பெரிய வெங்காயத்திற்கும், விலை முதல் விளைச்சல் வரை பல வேறுபாடுகள் இருக்கும் போது, இரண்டையும் ஒரே நிலைப்பாட்டில் வைத்து 40 சதவீத வரி விதித்திருப்பதால், இதனை மாற்றியமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்த வரிவிதிப்பை மாற்றியமைக்காவிட்டால் இனி வரும் காலங்களில் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று கூறப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!