சூப்பர்... இனி நில அளவை, பட்டா மாற்றம் எல்லாமே ஆன்லைன் சேவை!

 
நில அளவை

 தமிழகத்தில் பத்திரப்பதிவு, சொத்து பத்திரங்கள் தொடர்பான சேவைகள் குறித்த அனைத்து ஆவணங்களும் மென்பொருள் செயல்பாட்டுக்கு மாற்றப்பட்டு வருகிறது.   2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்ற சாஃப்ட்வேரை மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 1895 முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்கள் டிஜிட்டல் முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  

பத்திரப்பதிவு
தமிழகத்தில் விரைவில் இந்த மென்பொருள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. எனவே மக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை.  அத்துடன் பத்திரங்களை ஆன்லைனில்  பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டா மாற்றத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல்  பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamiinilam.tn.gov.in/citizen/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பத்திரப்பதிவு

அதே போல் நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு:  https://tamilnilam.in.gov.in/citizen என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் ஆகியவைகள் குறித்த தகவல்களை  https://tnlandsurvey.In.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web