இளநீர், பழச்சாறு மட்டும் தான்... 45 மணி நேரம் தொடர் தியானம்... 132 ஆண்டுகள் கழித்து விவேகானந்தர் இடத்தில் பிரதமர் மோடி !

 
மோடி

 இந்தியாவில் நாளை 7 ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குப்பதிவு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில்  132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கொடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் பிரதமர்  மோடி நேற்று தொடங்கி 45 மணி நேரத்திற்கு தியானத்தை மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று மாலை வருகை புரிந்தார்.  

மோடி

இதை தொடர்ந்து மாலை 5:40 மணிக்கு  பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.  அங்கு சாமி தரிசனம் முடிந்ததும்  மாலை 6 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் விவேகானந்தர் என்ற படகில் பயணித்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ளது.  விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர் தியான மண்டபத்தில் உள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர்,  சாரதா தேவி ஆகியோரில் சன்னிதிகளிலும் , சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கும் மலர் தூவி   மரியாதை செலுத்தினார்.  இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யத்  தொடங்கினார் .

மோடி

தொடர்ந்து  5 மணி நேரம் தியானம் அதன் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார்.   நாளை மாலைவரை  45 மணி நேரத்திற்கு தொடர் தியானத்தை மேற்கொள்ளயிருக்கிறார். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை  ஓய்வை தவிர பிரதமர் தூங்கப்போவதில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  ஓய்வு சமயத்தில் இளநீர்,  பழச்சாறு மட்டும் குடித்து முழு விரதம் மேற்கொள்கிறார்.  நாளை மாலை 4 மணிக்கு  தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர் படகுமூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து  ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web