உஷார்... 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!!

 
வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் அக்டோபர்  நவம்பர் மாதங்கள் அடைமழை காலம். அதாவது இந்த சமயத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிடும் .நடப்பாண்டில் இன்னும் தொடங்கவில்லை இதனால் பயிர்கள் வாடி வருகின்றன.  இந்நிலையில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தற்போது அரபிக் கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  அக்டோபர்  21ம் தேதியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இடி மின்னல் மழை

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளின் காரணமாக, தொடக்க  நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் வலு குறைந்து காணப்படும்" என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    மேலும் தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து, தென்னிந்தியப் பகுதிகளில் காற்று வீசக்கூடிய நிலையில், வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் 3 நாட்களில்  தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும்.தற்போது அரபிக்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபர் 21ம் தேதிக்கு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளின் காரணமாக, தொடக்க நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் வலு குறைந்து காணப்படும்.

தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், அரபிக் கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடலில் அக்டோபர் 23 வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.   வங்கக் கடல் பகுதியில், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில்   21ம் தேதி முதல் 23ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  சென்னையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web