ஓட்றா.. ஓட்றா.. பறந்த கற்கள்.. பாஜக வேட்பாளரை விரட்டி விரட்டி தாக்கிய கிராம மக்கள்.. வீடியோ வைரல்!
மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இந்நிலையில் அங்கு கிராமத்திற்கு சென்ற பாஜக வேட்பாளரை கிராம மக்கள் கற்களை வீசி தாக்கி விரட்டியடித்துள்ளனர். ஜார்கிராம் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரநாத் துடு, அந்தத் தொகுதிக்கு உட்பட்ட மோங்லபோட்டா வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடி கணக்கெடுப்பு நடத்தினார்.
#WATCH | West Bengal | BJP candidate from Jhargram Lok Sabha seat, Pranat Tudu was attacked allegedly by miscreants when he was visiting booth number 200 in Monglapota in the parliamentary constituency today pic.twitter.com/bfEYH7KgXT
— ANI (@ANI) May 25, 2024
அப்போது திடீரென மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்கினர். இதையடுத்து, மத்திய பாதுகாப்புப் படையினர் தடுப்பு வேலிகள் அமைத்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் வெவ்வேறு திசைகளில் இருந்து கற்கள் வீசத் தொடங்கி ஒரு கட்டத்தில் ஒரு கும்பல் ஒன்று சேர்ந்து வேட்பாளர் பிரநாத்தை தாக்கத் தொடங்கினர். இதையடுத்து அவர் வேறு வழியின்றி அங்கிருந்து ஓடினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வாக்குச்சாவடியில் பாஜக வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திரிணாமுல் கட்சியினர் அங்கு சென்று பார்த்தபோது என்னை தாக்கினர். சிலர் கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கினர்.. மத்திய பாதுகாப்பு படையினர் இல்லை என்றால் என்னை கொன்றிருப்பார்கள்.. ஆனால் உள்ளூர் போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.. அங்கிருந்து திரும்பி வரும் வழியில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என் காரை செங்கல்லால் தாக்கினர். இதற்கெல்லாம் மம்தா கட்சி தான் காரணம் என கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அமைதியான வாக்குப்பதிவை சீர்குலைக்க பிரநாத் முயன்றதாகவும், கிராம மக்கள் போராட்டம் நடத்தியபோது அப்பகுதிக்கு வந்த பாஜக வேட்பாளர் கிராம வாக்காளர்களை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
