அச்சச்சோ... இப்பவே இடுப்பளவு தண்ணீர்... கதறும் வேளச்சேரி மக்கள் | அரசின் முன்னெச்சரிக்கை நடவடிகை இவ்வளவு தானா?!

 
கனமழை

‘புலி வருது... புலி வருது’ கதையாக ஒவ்வொரு வருடமும் கனமழை பெய்யப் போகுது.. மீட்பு பணிகள் தயார் நிலையில் உள்ளன.. இந்த முறை மழைநீர் தேங்கி நிற்காது என்று தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் வாக்குறுதி கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, முதல்வர் ஸ்டாலின், இந்த முறை சென்னையின் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்காது என்று கூறியிருந்தார். 

“கனமழைக்கான அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தண்ணீர் தேங்கி நிற்காது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். ஆனால், நேற்றிரவு பெய்த மழைக்கே வேளச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி மக்கள் கதறுகின்றனர். 

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !

மழைநீர் வடிக்கால் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டது என்று போன வருட மழையின் போதே சொன்னார்களே... அத்தனைக் கோடி கொட்டி செயல்படுத்திய அந்த திட்டம் வீணாப் போச்சா? வடபழனி, தி.நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டைப் பகுதிகளில் கூட இந்த மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கிறதே? என்று பொதுமக்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இத்தனைக்கும் தற்போது சென்னையில் பெய்த மழை 6 செ.மீ. தான். நாளை 20 செ.மீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அரசின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள் எத்தனை சிரமத்திற்குள்ளாக வேண்டியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், வேளச்சேரியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  வேளச்சேரி, நேருநகர், காமராஜர் தெரு, நேதாஜி ரோடு உள்ளிட்டப் பகுதிகளில் தற்போது இடுப்பளவுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

சாலையில் செல்லும் கார்கள் பாதியளவுக்கு மேல் மூழ்கும் சூழ்நிலையும் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் சூழம் நிலையில் மக்கள் அடுத்து என்ன நடக்குமோ? கடந்த கால வெள்ளம் சூழ்ந்த வரலாறுகளை புதுப்பிக்குமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இன்று வடகிழக்கு பருவமழை  தொடக்கம்!      நம்ம மாவட்டத்திற்கு கனமழை !

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெள்ள நீர் செல்லும் பங்காரு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், இந்தப் பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு பங்காரு கால்வாய் வழியாகத்தான் 50 கிராமங்களில் பெய்த மழை நீர் செல்லும் என்பதால் வேளச்சேரியில் தண்ணீர் வடிய வழியில்லாமல், வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நாளை பெய்ய உள்ள அதிகனமழை குறித்து தங்கள் அச்சங்களைப் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். 

முதல்வரோ, துணை முதல்வரோ அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது தான். ஆனால், சென்னைக்கு மேயர்ன்னு ஒருத்தருக்கு வோட்டு போட்டு ஜெயிக்க வெச்சோமில்ல? அந்தம்மா கூட எட்டிப் பார்க்கலை... சரி வேளச்சேரி இத்தனை தூரத்தில் இருக்கு. ஆனா பெரம்பூர் பக்கத்துல தானே இருக்கு. அங்கேயும் நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதா சன் டிவியிலேயே காட்டுறாங்க என்று மேயருக்கு எதிராகவும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். 

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் திமுகவினரே கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மழை சமயங்களில் மீட்பு பணிகளில் கட்சிக்காரர்களும், கவுன்சிலர்களும் கூட ஏரியா பக்கம் எட்டிப்பார்க்காததால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!