அச்சச்சோ... முதலிரவை வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட இளம்ஜோடி... காரி துப்பாதீங்க!!!

 
ரீல்ஸ்

டேய்... நீங்க 2கே.. 20 கே கிட்ஸ் ஆக கூட இருந்துட்டு போங்க.. ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருடா என்று கவுண்டமணி ரசிகர்கள் இந்த ரீல்ஸ் வீடியோவைப் பார்த்து படு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ரீல்ஸ் மோகம் அந்தளவுக்கு இன்றைய இளசுகளிடையே வைரலாகி அதிகரித்து வருகிறது. போற போக்கைப் பார்த்தா எத்தனை பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதையும் இனி வரும் காலங்களில் பயோ டேட்டாக்களில் சேர்த்து விடுவார்கள் போல.

காலை எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவு தூக்கம் கண்ணை சொருகும் கடைசி நொடி வரை ரீல்ஸ் தான். அதிலும் திருமணம் போன்ற விசேஷங்கள் நடந்தால் திருமணத்திற்கு முன்பும் பின்பும் தம்பதிகள் ரீல்ஸ் பதிவு செய்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எல்லாம் ப்ரீயாவே ஷகிலா, சில்க் ஸ்மிதா படங்களைப் பார்ப்பதைப் போல இலவச காட்சியாக பாதி முதலிரவில் திருமணமான ஜோடி எழுந்து அடித்து பிடித்து ஓடுவது போல எல்லாம் துண்டைச் சுற்றிக் கொண்டு ஓடுகிறார்கள். இலை, தழைகளால் மேலும் கீழும் மறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். இதையெல்ல்லாம் பெத்ததுங்க கேட்கறதில்லையா? என்று ஒருவர் குரல் எழுப்ப, பெண்ணின் தாயார் திருமண வரவேற்பில் போட்ட குத்தாட்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்து ஆறுதல் சொல்கிறார் இன்னொரு பயனர்.


இந்நிலையில், திருமணமான ஜோடி ஒன்று, தங்களது முதலிரவு ஏற்பாடுகளையும், முதலிரவுக்கு தயாராவதையும் ரீல்ஸ் செய்து வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆண்கள், பெண்கள்  பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில்  பதிவேற்றம் செய்து வருகின்றனர்.   அந்த வகையில், புதிதாக திருமணமான ஜோடி ஒன்று தங்களது முதலிரவை ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். இது குறித்து வெளியான வீடியோவில்  புதிதாக திருமணமான மணமகனும், மணமகனும் தங்களது முதலிரவு அறையில் இருக்கின்றனர். மணமகள் சட்டையின்றி வெறும் பனியனுடன் இருக்கிறார். அவரது மனைவி அருகில் இருக்கிறார்.

இருவரும் அந்த வீடியோவில் தங்களை அறிமுகம் செய்து கொண்டதோடு, முதலிரவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள கட்டில், மலர் அலங்காரம் இவைகளை  காண்பிக்கின்றனர். பின்னர் இருவரும் முத்தமிட்டுக் கொள்கின்றனர்.  முதலிரவு வ்லாக் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள்  கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.  பைத்தியம் முற்றிவிட்டதாக கருத்து பதிவிட்டுள்ள பலர், தனிப்பட்ட வாழ்க்கையை சில ரூபாய்களுக்கு விற்க தயாராகி விட்டதாகவும் விமர்சனம் செய்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web