அச்சச்சோ... 120 வருடங்களில் இந்த வருஷம் தான் உச்சம்... 2025 மிக வெப்பமான வருடமாக இருக்கும்... வானிலை மையம் எச்சரிக்கை!!
புது வருஷம் என்னென்ன நல்லது செய்யும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஐரோப்பாவில் பேரழிவு நடக்கும் என்று பாபா வங்கா கணிப்புகள் ஒருபுறம் பயமுறுத்திக் கொண்டிருக்க, கொரோனா போல இன்னொரு வைரஸ் தொற்று பரவல் உலகம் முழுவதும் இருக்கும் என்று நோஸ்ட்ராடமல் கணிப்புகள் கலங்க வைக்கிறது.
இந்நிலையில், இந்த 2025ம் வருடம், 1901க்கு பிறகு அதாவது 120 வருடங்களுக்குப் பிறகு அதிக வெப்பமான ஆண்டாக பதிவாகும் என்று வானிலை மையம் அதிர்ச்சியளிக்கும் செய்தியைக் கூறியுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 ல் ஆண்டு சராசரி வெப்பநிலை 25.75 டிகிரி செல்சியஸ், நீண்ட கால சராசரியை 0.65 டிகிரி செல்சியஸ் தாண்டியது. சராசரி அதிகபட்ச வெப்பநிலை 31.25 டிகிரி செல்சியஸ் ஆகும், இது இயல்பை விட 0.20 டிகிரி செல்சியஸ். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகபட்சமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 2024, தனித்தனியாக, 123 ஆண்டுகளில் வெப்பமான மாதமாக இருந்தது. அதன்படி, 2024ம் ஆண்டை மிக வெப்பமான ஆண்டாக இருப்பதாக தெரிவித்துள்ளது. 2024 ஐ பொறுத்தவரை உலக அளவில் 41 நாட்களுக்கு ஆபத்தான அதிக வெப்பநிலையைக் கண்டதாக தெரிவித்துள்ளது. முந்தைய வெப்பமான ஆண்டான 2016 ல், 0.54 டிகிரி செல்சியஸ் இருந்தது. 2016 மற்றும் 2024 ல் சராசரி வெப்பநிலைக்கு இடையே 0.11 டிகிரி C வித்தியாசம் மிகவும் அதிகமாக உள்ளது.
பொதுவாக வட இந்தியாவில் குளிர்ந்த குளிர்காலத்துடன் தொடர்புடைய லா நினா நிலைமைகள் ஜனவரி மாதத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பால் இயக்கப்படும் 1850-1900 அடிப்படையுடன் ஒப்பிடுகையில், உலக சராசரி வெப்பநிலை ஏற்கனவே 1.3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.

2025 ஜனவரி மாதத்தில் உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பகுதிகள், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தின் சில பகுதிகள் மற்றும் கிழக்கு இந்தியாவின் பீகார் போன்ற பகுதிகளைத் தவிர இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மாதாந்திர வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.
இந்நிலையில், வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் 2025ம் ஆண்டும் வெப்பம் மிகுந்த ஆண்டாகவே இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
