அச்சச்சோ... முதல் வகுப்பு நாளிலேயே சோகம்... மின்வயர் அறுந்து விழுந்து 12ம் வகுப்பு மாணவி பலி!

 
ஏஞ்சல்
விருந்துநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மின்சார கம்பத்திலிருந்த வயர் அறுந்து விழுந்ததில் 16 வயது பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சண்முகசுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் கருத்தபாண்டி. இவரது மகள் ஏஞ்சல்(16) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருவிக அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

இந்நிலையில் இன்று காலை சண்முகசுந்தராபுரத்தில் உள்ள தண்ணீர் குழாயில் மாணவி ஏஞ்சல் துணி துவைத்து கொண்டிருந்த போது அவரது தலைக்கு மேல் சென்ற மின்சார கம்பத்தின் வயர் திடீரென அறுந்து மாணவி ஏஞ்சல் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது இறப்பை உறுதி செய்து, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்தனர். N.சண்முகசுந்தராபுரம் பகுதியில் இருக்கும் கொடிக்கம்பங்களில் மின்சார வயர் தாழ்வாக செல்வதாகவும், அறுந்து விழும் நிலையில் ஏராளமான மின்சார கம்பிகள் இருப்பதாகவும் அதை சரி செய்ய பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். 

வயர்

பள்ளி வகுப்புகள் தமிழகம் முழுவதும் இன்று திறந்த நிலையில், வகுப்பின் முதல் நாளிலேயே 12ம் வகுப்பு மாணவி ஏஞ்சல் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மின் வயர் அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web