ஊட்டி மலை ரயில் ரத்து... சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது.
அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூர் மக்களுடன் உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் ரயில் பாதையில், பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனமழை தொடர்வதால் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று ஒரு நாள் மட்டும் நாள் முழுவதும் ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!