நவம்பர் 16 வரை மலை ரயில் ரத்து... சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி...!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் இருந்து ஊட்டிக்கு வருகை தரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரயில் மூலம் உதகையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் நவம்பர் 16ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளன. பருவமழை நீடிக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!